- Featured, JHC-Events

தமிழ் மொழித்தின விழா – 2018

தமிழ் மொழித்தின விழா – 2018

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்விழா இன்று 25.10.2018 காலை கோலாகலமாக இடம்பெற்றது.

இந்துக் கல்லூரித் தமிழ்ச்சங்கத் தலைவர் பா.பாலசிவானுஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதிபர் சதா.நிமலன் முன்னிலை வகித்தார்.

பிரதம விருந்தினராக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அழைக்கப்பட்டிருந்தபோதிலும் காலை பெய்த கடும் மழை காரணமாக வான்வழிப் பயணத்தில் ஏற்பட்ட தடங்கல்களால் கலந்து கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ் சொல்லருவி திரு.ச.லலீசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

ஞானலிங்கேஸ்வரர் வழிபாடு ஞானவைரவர் வழிபாடுகளைத் தொடர்ந்து மானாட்டம் மயிலாட்டம், பொம்மலாட்டம் என இன்னிய இசையுடன் பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றது.

தொடர்ந்து மாணவர்களின் கலை ஆற்றுகைகள் அரங்கேறின.

கல்லூரியில் 42 வருடங்கள் தொடர்ச்சியாக இசையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி த.செல்லத்துரை “நற்றமிழ் காவலர்“ என விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மாணவர்களின் கலை ஆற்றுகைகள் கல்லூரியின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் சிறப்புற இடம்பெற்றிருந்தன.