- Events, Featured

Raaga 2019 – இதய பூர்வ நன்றிகள் !

27th March 2019

“வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி, வையகம் புகழ்ந்திட என்றும்…”

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு
பெருமையுடன் வழங்கிய பிரமாண்ட இசை நிகழ்ச்சி “Raaga -2019” இமாலய
வெற்றியை பதிவு செய்தமை யாவரும் அறிந்ததே. கடந்த கால
வரலாற்றில் இந்த நிகழ்ச்சியானது ஒரு புதிய பாதை ஒன்றை
வகுத்திருக்கின்றது. எம்மை மீண்டும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது
மட்டுமில்லாமல் மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி 125வது ஆண்டு விழா மற்றும் பல விழாக்களை /
நிகழ்வுகளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
கொழும்பு மிகவும் சிறப்பாக கொழும்பில் நடாத்தி வெற்றிகொண்டிருந்தது
மட்டுமல்லாமல் பலரது பாராட்டுக்களையும் வரவேற்புக்களையும்
பெற்றிருந்தது. அந்த வகையில் “Raaga – 2019” என்பது இவற்றுக்கெல்லாம்
மகுடம் சூட்டுவது போல அமைந்திருந்தது.

“Raaga – 2019” நிகழ்வானது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய
மாணவர் சங்கம் கொழும்பினது புதிய ஒரு
அடையாளத்துடனான பரிணாமம். இந்த பிரமாண்ட வெற்றியில்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு
உறுப்பினர்கள் பலரது அயராத உழைப்பு பொதிந்துள்ளது. அவர்கள்
அவனவரும் இவ்வெற்றியின் பங்காளர்கள். அவர்கள் அனைவரையும்
அன்புடன் நன்றி கூறுகின்றோம். சிலரது உழைப்பை சொல்லில்
வடித்துவிடமுடியாது என்பதையும் இங்கு நினைவுறுத்துகின்றோம். எது
எப்படியாயினும் நாம் அவனவரும் இந்துவின் மைந்தர்களாக
ஒன்றிணைந்து உளமகிழ்கின்றோம்.

இந்த நிகழ்வின் வெற்றியின் முக்கிய தூண்கள் பிரதான
அனுசரணையாளர்கள் மூவரும் இணை அனுசரணையாளர்கள்
அறுவரும் நிச்சயமாக கோடிட்டு காட்டப்படவேண்டியவர்கள். இவர்கள்
அவனவரும் இந்துவின் மைந்தர்கள் மட்டுமல்லாமல்
பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்
சங்கம் கொழும்பு உறுப்பினர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

கல்லூரி அன்னையின் பாலான இவர்களுடைய அன்பும் மதிப்பும்
பெருமைப்படவேண்டியது. பிரதான அனுசரணையாளர்கள் என்பதை
தாண்டி இந்த நிகழ்வின் வெற்றிக்கு பிரதான அனுசரவணயாளர்களின்
அளப்பெரிய உழைப்பு எம்மை வியக்க வைத்திருந்தது. இவர்களால் இது
சாத்தியமானது என்று கூறுவதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய
மாணவர் சங்கம் கொழும்பு பெருமைகொள்கின்றது.

நிகழ்வினுடைய இதழுக்கு நூற்றுக்கு மேற்பட்ட விளம்பரங்களை பல
வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் வழங்கியிருந்தன.
அவர்களுடைய பேராதரவுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய
மாணவர் சங்கம் கொழும்பு மகிழ்ச்சியுடன் உவகை கொள்கின்றது.
இவற்றினை பெற்றுக்கொள்வதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய
மாணவர் சங்கம் கொழும்பு உறுப்பினர்கள் மற்றும் பலரது பங்களிப்பும்
முக்கிய காரணமாக இருந்தது என்பதையும் நன்றியுடன் நினைவு
கூறுகின்றோம்.

நிகழ்வுக்கான நுழைவுசீட்டு விற்பனைக்கும் பங்களித்தவர்களுடைய
பங்களிப்பு நிச்சயமாக பாராட்டப்படவேண்டியது. யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு உறுப்பினர்கள் மற்றும்
இன்னும் பலர் இந்த பணியில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
இவர்களுவடய கடின உழைப்பினாலேயே நிகழ்வுக்கு முன்னரே அனைத்து
நுழைவு சீட்டுகளையும் எம்மால் விற்று முடிக்கமுடிந்தது. இந்த நிகழ்வின்
நோக்கத்தை அடைவதில் முக்கியமானது நுழைவு சீட்டுகளை முற்றாக
விற்று முடிப்பது என்கின்ற முக்கிய சவால். இதனை யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு வெற்றிகரமாக தாண்டி
செல்ல பங்களித்த அவனவருக்கும் உளம் கனிந்த நன்றிகள்.

ஊடக அனுசரவண வழங்கிய தொலைக்காட்சி நிறுவனத்தினர், பத்திரிகை
நிறுவனத்தினர், ஒலி மற்றும் ஒளியவமப்புகளை மிகுந்த தரமாகவும்
சிறப்பாகவும் வழங்கிய நிறுவனத்தினர், எல்லா வழிகளிலும்
சந்தைப்படுத்தலில் உதவிய நிறுவனத்தினர் மற்றும் தனிப்பட்டவர்கள்,
மற்றும் பண உதவி (Donation) வழங்கியோர் அவனவரையும் நன்றியுடன்
நினைவு கூறுகின்றோம். யாரையும் நினைவு கூறவோ நன்றி கூறவோ
தவறியிருந்தால் அவர்களுக்கும் எமது மன்னிப்புடன் கூடிய மனமார்ந்த
நன்றிகள் உரித்தாகட்டும்.

நிறைந்த வெற்றிகளிற்கு பின்னால் நிச்சயமாக சில
குறைகள் இருக்கத்தான் செய்யும். அவ்வாறு ஏதாவது சம்பவங்கள்
யாரையும் மனவருத்தத்துக்கு அல்லது சலிப்புக்கு உட்படுத்தியிருந்தால்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு அடுத்த
தடவைகளில் அவற்றை நிச்சயமாக திருத்திக்கொள்ளும் என்று
உறுதியளிப்பதுடன் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கற்றுக்கொண்ட பாடங்களாக அவற்றை கொண்டு மீண்டும் இன்னும்
சீர்தூக்கி மெருகூட்டி உங்களை அடுத்த தடவை மகிழ்வடைய
செய்வோம். இதுவரை இந்த நிகழ்வின் வெற்றிக்கு ஆக்கமும் ஊக்கமும்
பல்வேறு வழிகளில் வழங்கியது போல தொடர்ந்தும் யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினராகிய நாம் உங்கள்
அவனவரது அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

நன்றி.
செயலாளர்,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு