- Featured, JHC-Events, News

ராகா 2019 இசை நிகழ்ச்சி

கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினால் இந்த ஆண்டு நடாத்தப்பட்ட ராகா 2019 இசை நிகழ்ச்சிக்கு எம்மால் செலுத்தப்பட்ட அரசாங்க வரியினை மீளப் பெறும் எமது முயற்சி அண்மையில் வெற்றியடைந்துள்ளது. இத்துடன் இந்நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை, ராகா மலர் விளம்பரம் மற்றும் நிதி அன்பளிப்புகள் மூலம் நாம் பெற்ற மொத்த இலாபம்  ரூபா 8.17 மில்லியன் ஆகும்.

நாம் இந்நிகழ்ச்சியில் இருந்து பெறப்படும் பணத்தின் மூலம் பாடசாலையின் மலசலகூட வசதிகள் புனரமைப்பு, புதிய மலசலகூடங்கள் அமைத்தல் மற்றும் மலசலகூடங்களை பராமரித்தல் போன்றவற்றை செய்ய எண்ணியிருந்தோம். ஆனாலும் கடந்த காலத்தில் பாடசாலையில் வேலைத்திட்டங்களை செய்வதில் இருந்த சில சிக்கல்களினால் எம்மால் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை. இந்நிலையில் புதிய மலசலகூடம் அமைத்தல் மற்றும் புனரமைத்தல் ஆகியவற்றிற்கான நிதியை அரசாங்கத்திடமிருந்து பெறும் வாய்ப்பும் காணப்பட்டதால் நாம் அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெறுவது என்றும் மேலதிகமாக தேவைப்படும் நிதியை ராகா நிதியில் இருந்து பயன்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவற்றிக்கான செலவுகள் போக மேலதிக ராகா நிதி காணப்படுமிடத்து அது எதிர்காலத்தில் பாடசாலைக்கான  வேறு தேவைகளிற்கு பயன்படுத்தப்படும். அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிதியும் பெற முடியாதவிடத்து ராகாவில் பெறப்பட்ட நிதி மலசலகூட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். நாம் ஏற்கனவே அரசாங்கத்திடம் இந்நிதிக்கான வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் அதற்கு சாதகமான பதிலும் கிடைத்துள்ளது. விரைவில் இது சம்பந்தமாக நாம் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இது தவிர ஏற்கனவே ராகா நிகழ்வின்போது எமது வேண்டுகோளிற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவணபவன் அவர்களால் ஒதுக்கப்பட்ட நிதி ரூபா 1 மில்லியனில் ஒரு தொகுதி புதிய மலசல கூடங்கள் அமைக்கும் பணி பாடசாலையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Raaga_20191014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *