யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினால் சாரணர்களின் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் நோக்கமாக மூன்று நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி முகாம் ஒன்று சிறப்புற கல்லூரி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு துறைசார்ந்த வளவாளர்கள் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகளினை சாரணர்களிற்கு வழங்கியிருந்தனர். இதன் போது சாரணர்களிடையே மறைந்திருந்த பல்வேறு திறமைகள் வெளிக்காட்டப்பட்டிருந்தமை அனைவரதும் பாராட்டினையும் பெற்றிருந்தது. குறித்த நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் வழிகாட்டுதலில் திரி சாரணர்களின் பூரண ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருப்புத் தலைவர் செல்வன்.சி.பிரணவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வினை குழுச்சாரண பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் நெறிப்படுத்தியிருந்தார். நிகழ்வுகள் 22.10.2018 (திங்கட்கிழமை) மாலை மூன்று மணியளலில் சாரணர் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இறுதி நிகழ்வானது 24.10.2018 புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இந் நிகழ்விற்கு மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு.எஸ்.தவகோபால் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததார்.