- Events, Featured, JHC-Events, News

பேராசிரியர் சி. சிவானந்தன் அவர்கள் கல்லூரி வருகை.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் விஞ்ஞானி பேராசிரியர் சிவா.சிவானந்தன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து 21.10.2019 (இன்றையதினம்) கல்லூரி அன்னைக்கு வருகை தந்திருந்தார்.

கல்லூரி முதல்வர். திரு.ரட்ணம் செந்தில்மாறன் அவர்கள் தலைமையில் மாணவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. பிரார்த்தனை மண்டபத்தில் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு முதல் உரையை ஆற்றினார்.

அதன் பின்னர் சபாலிங்கம் மண்டபத்திலே உயர்தர மாணவர்கள் முன்னிலையில் பெறுமதி வாய்ந்த ஊக்கம் கொடுக்கும் உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து அவருக்கான நினைவுப்பரிசில் வழங்கல் , கௌரவிப்பு என்பன நடைபெற்றது. இந் நிகழ்வு கல்லூரி மாணவ முதல்வன் தலைமையில் நடைபெற்றது.

இந்து அன்னையின் பழைய மாணவர்களுள் ஒருவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன்
அமெரிக்காவில் வெள்ளைமாளிகையினால் வழங்கப்படும் உயர் விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். 29.05.2013 காலை வெள்ளை மாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தமிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருடன் சேர்த்து 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

தனது முயற்சியினால் “சிவானந்தன் ஆய்வு மையம்” என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாபநோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகபெளதீகவியற்றுறையினரும் கூரியக் கதிர் தொழில்நுட்பத்தில் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

                                                                                                                                                                                                                              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *